ஆதவன்
விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் இறுதியுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் விசாரணையின் போது உறவினர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
சரணடைந்தவர்கள் பேருந்துக்களில் ஏற்றி ஓமந்தை சோதனைசாவடிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ஆணித்தரமாக சாட்சியமளித்துள்ளனர்.
காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் விசாணைகள் இன்றுடன் மூன்று நாட்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று காலை ஆரம்பமான இந்த விசாரணையில் சாட்சியமளித்தவர் இராணுவம், கருணாகுழு, ஈ.பிடி.பி ,வெள்ளைவானில் வந்தவர்களினாலும் தமது பிள்ளைகள் கடத்தப்பட்டதாகவும் அதன்பின்பு அவர்கள் காணாமல் போனதாகவும் சாட்சியமளித்தனர்.
அதேவேளை இறுதியுத்தத்தின் போது முள்ளவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான போராளிகள்.பொதுமக்கள் எனப்பலர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டதாகவும். விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் போராளிகள் தாங்களாக வந்து சரணடைந்தால் தண்டனையில்லை எனவும் விசாரணையின் பின்விடுதலை செய்யப்படுவீர்கள் என்று இராணுவத்தினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்ததாகவும் இராணுவத்தினரின் இந்த அறிவிப்பினை நம்பி விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சரணடைந்ததாகவும் ஆணைக்குழுவிடம சாட்சியமளித்தனர்.


Post a Comment