வாழைச்சேனை கடதாசி கம்பனியின் வாழைச்சேனை அலையில் தீடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அந்த ஆலைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த தீ விபத்து நேற்று சனிக்கிழமை மாலை 4.30. மணியளவில்இடம்பெற்றுள்ளது. மீள் சுழற்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 8 தொன் கடதாசிகள் உள்ளிட்ட பல பொருட்க்கள் எரிந்து முற்றாக சாம்பராகியுள்ளது.
தீ விபத்து இடம்பெற்றுள்ளதையடுத்து இராணுவத்தினரும் பொலிசாரும் மற்றும் தீயணைக்கும் படையினரின் முயற்ச்சியினால் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பள நிலுவை கோரி நிர்வாகத்திற்கு எதிராக ஆலை ஊழியர்களினால் அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்தமையையிட்டு கடந்த 14.02.2014 ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 17.02.2014 ஆம் திகதி காலை 6.00மணி வரைக்கும் ஆலையை தற்க்காலிகமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டதாகவும் எனினும் நேரப்பதிவாளர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், ஆளிப்பலகை இயக்குனர்கள், சாரதிகள் ஆகியயோர் வேலைக்கு சமுகமளித்தல் வேண்டும் அதற்காக அவர்கள் மேலதிக ஊதியம் பெற உரித்துடையவர்கள் என்றும் ஆலை நிர்வாகத்தினால் வெள்ளிக்கிமை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்து.
இதேவேளை ஊழியர்கள் இல்லாத நிலையில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளமையானது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment