GuidePedia

0

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் சிராந்தி ராஜபக்சவின் முன்னிலையில், இலங்கையின் ஆட்சியாளர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதிகாரம் கிடைத்த அரச தலைவர் அதனை கடவுள் வழங்கியதாக நினைத்து, ஆட்சி அதிகாரத்தை தனது குடும்பத்தை சுற்றி கட்டியெழுப்புகின்றார்.

mahinda-chandrika

இதன் மூலம் எதிரிகள் ஏற்பட்டால் அவர்களை நசுக்குகின்றார்கள். ஆட்சியிலிருக்கும் ஜனாதிபதி தன்னைப் பற்றி மட்டும் சிந்தித்தால், ஊழல் மோசடிகள் ஏற்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் இந்தியாவின் பெங்களுரில் ஏற்பாடு செய்திருந்த மகளிர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதிகதிகளுக்கு 10 நிமிட காலம் வழங்கப்பட்ட போதிலும் சந்திரிக்கா 30 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார்.

Post a Comment

 
Top