கல்முனையில் கடந்த 300 வருடம் பழமைவாய்ந்த தமிழர்களின் பூர்வீக கிராமாக அமைந்துள்ள கல்முனை தரவைப் பிள்ளையார் கோவில் வீதியை கடற்கரைப் பள்ளிவாசல் வீதி என பெயர் மாற்றத்தை கண்டித்து அமைதிப் பேரணி இன்று (10) காலையில் இடம்பெற்றது.
இவ் பேரணியில் கல்முனை இந்து ஆலய பிரதமகுருக்களும் கல்முனை விகாராதிபதி, கிறிஸ்தவ பாதிரியார். தமிழரசுக் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் பெண்கள் உட்பட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு இன ஒற்றுமையை குலைக்காதே, அன்று சாய்ந்தமருது இன்று தரவைக்கோவில் வீதி நாளை?, புனித பள்ளிவாசலை நிறுத்தி இன உறவுக்கு வேட்டா. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளிடம் ஒருமுகமும் கல்முனை தமிழர்களிடம் மறுமுகமும் காட்டாதே, என்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அமைதி பேரணியாக கல்முனை மாநகரசபை மற்றும் கல்முனை தமிழ் பிரதேச செயலகம், முஸ்லிம் பிரதேச செயலகம் வரை சென்று பகல் 11 மணிக்கு மகஜர்களை மாநகர ஆணையாளர். பிரதேச செயலாளர்களிடம் கையளித்து கலைந்துசென்றனர்.

Post a Comment