GuidePedia

0

அழகிப் பட்டத்துக்காக உடலில் பல்வேறு பாகங்களிலும் அழகுக்காக சத்திரசிகிச்சை செய்துகொள்வது வழக்கமானது. ஆனால் வெனிசுலா யுவதியொருவர் வித்தியாசமாக நாக்கில் பிளாஸ்டிக்கை தைத்துக்கொண்டுள்ளார்.

 


திண்ம உணவினை நிறுத்தி ஒல்லியான தோற்றத்தை பெற்று வெனிசுலா அழகியாக முடி சூடுவதற்காகவே நாக்கில் இந்த பிளாஸ்டிக் தையலாம்.


வெனிசுலாவைச் சேர்ந்த 18 வயதான மெயெர் நவா என்ற யுவதியே சுவையினை உணராதிருப்பதற்காக தனது நாக்கினை பிளாஸ்டிக்கினால் மறைத்து தைத்துள்ளார்.


வெனிசுலா அழகியாக மிஸ் வெனிசுலா பட்டத்தை தனவவசப்படுத்துவதே இந்த யுவதியின் கனவு. இதற்காக ஏற்கனவே மூக்கு மற்றும் மார்பகங்களை அழகுபடுத்தும் முயற்சிக்காக 7,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 915,000 ரூபா) செலவிட்டுள்ளார் மெயெர்.


ருசியினை தவிர்க்கும் இந்த பிளாஸ்டிக் தையல் குறித்து மெயெர் கூறுகையில், 'இது எனது உடல் எடையை வெகுவாக குறைக்கின்றது. திரவமாக வழக்கமான அளவில் உண்ணலாம். எனது வெற்றியானது சேரியுள்ளவர்களும் வெற்றி பெறலாம் என உலகுக்கு காட்டும்' என நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளார் மெயெர்.


உலகின் பயங்கரமான இடமாகவும் கொலை விகிதம் அதிகமுள்ள பிரதேசமாகவும் உள்ள வெனிசுலாவின் தலைநகரான கராகஸிலுள்ள ஸன்டா க்ரஷ் பரியோ எனும் இடத்திலேயே மெயெர் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top