குடும்ப தகராறின் போது பெண்ணொருவர் தனது கணவரின் சகோதரனின் 6 வயது மகனின் காதுகளை வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஹுபி மாகாணத்தில் ஸியங்யாங் நகரைச் சேர்ந்த ஸாங் கிஹுயி (35 வயது) என்ற பெண்ணே தனது கணவரின் சகோதரனின் மகனான வாங்யுபானின் காதுகளையும் நாடியின் ஒரு பகுதியையும் துண்டித்துள்ளார்.
வலி தாங்காமல் சிறுவன் கதறுவதைக் கேட்ட அயலவர்கள் உடனடியாக சிறுவனை அவனது துண்டிக்கப்பட்ட காதுகள் சகிதம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும் சிறுவனது வலது காதை மட்டுமே மருத்துவர்களால் வெற்றிகரமாக மீளப் பொருத்த முடிந்துள்ளது.
இந்நிலையில் திட்டமிட்டு சிறுவனை காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஸாங் கிஹுயி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment