GuidePedia

0
மஸ்கெலியாவிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்ற தனியார் பஸ்ஸ{டன் மஸ்கெலியா கிலண்டின் தோட்டத்தில் இருந்து மஸ்கெலியாவிற்கு சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரே பலியாகியுள்ளார்.மோட்டர் சைக்கிளில் பயணித்த மற்றொருவர் படுகாயத்திற்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
குறித்த பஸ் சாரதியை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மோட்டர் சைக்கிள் சாரதியின் கவனயீனமே விபத்திற்கு காரணம் என சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top