GuidePedia

0
க.கிஷாந்தன்
 
நுவரெலியா, அக்கரபத்தனை நகரிலிருந்து மணிக்பாலம் காலநடை பண்ணைக்குச் செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி  ஹோம்வ+ட் மற்றும் போபத்தலாவ பிரதேச மக்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
 
சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுடைய குறித்த வீதி பலவருடங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.
 
இதனால் பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் என பல இப்பாதையின் ஊடாக போக்குவரத்தை மேற்கொள்வதில் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே குறித்த வீதியை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top