வத்துகாமம் பொலிஸ்பிரிவிலுள்ள மடவளைப் பிரதேசத்தில் மூன்று வயது சிறுவன் பாழடைந்த நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மடவளையிலுள்ள அயற்கிராமமான புகையிலைத் தோட்டம் என்ற பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த மொகமட் ராயிப் என்ற மூன்று வயதுடைய சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக மரணமடைந்துள்ளான்.
வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் மரண வீடொன்றுக்குச் சென்ற சமயம் மேற்படி சிறுவன் இன்னொறு சிறுவனுடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்த சமயம் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில் அவ்வழியாகச் சென்ற நபரொருவர் நீர் குட்டையில் பாதணி ஒன்று மிதப்பதை அவதானித்ததையடுத்தே குறித்த சம்பவம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து குறித்த சிறுவனை மீட்டு வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்றும் ஏற்கனவே சிறுவனின் உயிர் பிரிந்திருந்ததால்சிறுவனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் வத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment