திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பிரதேசத்தில் தனியார் சொகுசு பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
மரண வீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சாரதி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment