புதுடெல்லி: ராஜீவ் கொலை வழக்கில் மூவரின் தூக்கு தண்டனை ரத்தானதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மூவரின் தூக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது வருத்தம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களே விடுதலையானால் சாமானியனர்களின் நிலை என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமது தந்தை ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ததாக கூறிய அவர், தாம் மரணத் தண்டனைக்கும் எதிரானவன் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் மூவரின் தூக்கு தண்டனை ரத்தானதற்கு ராகுல் காந்தி வருத்தம்