ஆதவன்
வீட்டுத்தேவைகளே யாழ். மாவட்டத்தில் அதிகமாகவுள்ளது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நோர்வே தூதுவரிடம் எடுத்து கூறியதாக ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இன்று காலை இலங்கைக்கான நோர்வே தூதுவர் கேட்ஜோ லோசனுக்கும் யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்குமிடையிலான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது யாழ்.மாவட்ட மக்களுக்கு பல்வேறு அடிப்படை தேவைகள் இருப்பதாகவும் அவற்றில் உடனடியாக வீடுகள் அல்லது தற்காலிக குடியிருப்புக்கள் தேவைப்படுவதாக அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு பதிலளித்த நோர்வே தூதுவர் தம்மிடம் நிதி உள்ளது. ஆயினும் இது தொடர்பில் சரியான தகவல்களை திரட்டி முன்னுரிமை அடிப்படையிலே தங்களாலான உதவிகளைச் செய்ய தயாராகவுள்ளதாகவும் இதுதொடர்பாக அறிந்து செல்லவே வந்தேன் என்று நோர்வே தூதுவர் தெரிவித்ததாக அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment