ஐ.பி.எல். போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங்
செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி ஒப்புக்
கொண்டார் என குருநாத் மெய்யப்பன் கூறுவதாகச் சொல்லப்படும் தொலைபேசி
உரையாடல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக இந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்று நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு பொலிஸாரின் அறிக்கையில்,
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் நிர்வாகி குருநாத் மெய்யப்பன்,
சூதாட்ட புக்கி விண்டு மற்றும் பவண் ஆகியோரிடையேயான தொலைபேசி உரையாடல்கள்
எழுத்து வடிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
அதில், குருநாத் மெய்யப்பனும், விண்டுவும் கடந்த 2013 மே 12, 15 உள்ளிட்ட
திகதிகளில் பேசிக் கொள்வது பதிவாகியுள்ளது. அதில் போட்டி நடக்கும்
விவரங்கள், டோனி, ரெய்னாவை குருநாத் மெய்யப்பன் அணுகியது, மேட்ச் பிக்ஸிங்
செய்ய டோனி ஒப்புக் கொண்டதாக குருநாத் கூறுவது உள்ளிட்டவை
பதிவாகியுள்ளதாகக் கூறப்ப டுகிறது.
ரெய்னா விளையாடுவதும், கேட்ச் முறையில் ஆட்டமிழப்பதும் விவாதிக்கப்படுகின்றன.
இதில், விக்ரம் என்பவரின் பெயரும் மேலும் சில கிரிக்கெட் வீரர்களின்
பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. குருநாத் மெய்யப்பன், இல்லை நாம்
கண்டிப்பாக வெற்றி பெறுவோம் எனக் கூறுவதும், சில விஷயங்களை காசு
கணக்குகளில் கூறுவதும் பதிவாகியுள்ளது.
இந்த சூதாட்டத்தில் ஐ.பி.எல். முக்கிய நிர்வாகிகளுக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படு கிறது.
மேட்ச் பிக்ஸிங் செய்வதற்கு தோனி ஒப்புக் கொண்டதாக, குருநாத் மெய்யப்பன்
கூறுவதாக தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
பிஷண் சிங் பேடி உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இவ்விஷயம்
தங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
