GuidePedia

உலகையே உலுக்கும் Cyber குற்றச் செயலானது இலங்கையிலும் துரிதமான அளவில் அதிகரித்து வருகிறது. கணினி மற்றும் இணையத்தள சேவைகளின் ஊடாக தனிப்பட்ட வணிக வர்த்தக மற்றும் நிதி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற போதிலும் இவ்வாறான செயற்பாடுகளினால் Cyber குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Genuine & Legal Software பாவனைக்கான தேவை அதிகரித்துள்ளது. 
 
தென்கிழக்கு ஆசியாவை மையமாகக் கொண்டு "கணினி பாதுகாப்பு ஆய்வு" என்ற செயற்திட்டமொன்றை 2013இல் மைக்ரோசொவ்ட் அறிமுகம் செய்தது. இதன் ஊடாக மூன்றில் இரண்டு முத்திரை (Branded) பதிக்கப்பட்ட புதிய கணினிகளுக்கு திருட்டு மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் Virus, Malware போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களும் சுட்டிக்காட்டப்பட்டது. Genuine & Legal Software Cyber  குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதனையும் பாவனையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. 
 
திரு. ஜயந்த பெர்னாண்டோ சட்ட இயக்குனர் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) கூறுகையில்,
 
தகவல் மற்றும் இணையத்தள வளர்ச்சியினால் Cyber அச்சுறுத்தல்கள் மற்றும் Cyber  குற்றச் செயல்கள் அதிகரித்து அது ஒரு எதிர்மறையான தாக்கத்தை தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. 
 
அரசு இந்தப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த கணினி குற்றவியல் சட்ட இலக்கம் 24/2007ஐ அமுல்படுத்தி இதன் அடிப்படையில் இந்த பிரச்சினையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தது. இந்த Cyber குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு தேசிய அளவில் இலங்கையில் CERT மையமொன்றை நிறுவியது. இந்த மையத்தின் ஊடாக அரச துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். மேலும் எமது நிறுவனமான ICTA அரசின் கொள்கையான (2009) தகவல் பாதுகாப்பு கொள்கைக்கு அமைய அரச துறைகளில் தகவல் பாதுகாப்பு தொடர்பாக எவ்வாறான சவால்கள் அடங்கியுள்ளன என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகவல் பாதுகாப்பு சிறந்த நடைமுறை திட்டத்தின் வாயிலாக Genuine & Legal Software பயன்படுத்துவதனால் இந்தப் பிரச்சினைகளை குறைக்கலாம். Genuine & Legal Software முக்கியமான அடித்தளமாக அமைவதுடன் பாவனையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் கூட இது முக்கியமானதாகும். 
 
இது தொடர்பாக பிராந்திய பணிப்பாளர் IP & Cybercrime Microsoft Asia Pacific Japan & Singapore>  Mr. Keshav Dhakad  கூறுகையில்,
 
Cyber குற்றச் செயல்களை எதிர்கொள்வதற்கும் அதனை கட்டுப்படுத்தவும் அதனை கணக்கிடவும் விரிவாக்கவும்   மைக்ரோசொவ்ட் ஸ்ரீலங்கா நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் மென்பொருள் சொத்து முகாமைத்துவம் (SAM), முக்கிய பங்குதாரர்களுடனும் அரசுடனும் கைகோர்த்துள்ளது. அதன்மூலமே Genuine & Legal Software  மற்றும் ஆரோக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளது. மைக்ரோசொவ்ட் உயர்ரக மென்பொருட்களை வழங்குவது மட்டுமன்றி அதனை மேம்படுத்தும் பொருட்டு சட்ட பிரகடனப்படுத்தும் குழுவோடு கைகோர்க்கிறார்கள். இதற்கு காரணம் CybercrimeI குறைக்கவும் திருட்டு மென்பொருட்களின் பாவனையைக் குறைக்கவும் முடியும் என்றார். 
 
Cyber குற்றச்செயல் புரிபவர்களை ஊடுருவி அடையாளம் காண்பதற்கு மைக்ரோ சொவ்ட் நிறுவனத்திற்கு சட்ட அமுலாக்க அதிகாரிகள் குழு உதவி வழங்கி வருகிறது. இதனால் இலங்கை பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவும் இணைந்து அமைத்துள்ள இணையத்தள குற்ற விசாரணை மையம் (IC3) இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும். 
 
திரு. லால் டயஸ், பிரதம நிறைவேற்று அதிகாரி இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு அதிகாரி ஒருங்கிணைப்பு மையம் (Sri lanka CERT/CC) கூறுகையில்,
 
மைக்ரோசொவ்ட் முதலில் வருடாந்த சைபர் பாதுகாப்பு வாரத்தை நடத்துவதற்கு Sri lanka CERT உடன் கைகோர்த்தது. இதன் விளைவாக மைக்ரோசொவ்ட் பாதுகாப்பு கழக நிகழ்ச்சித்திட்டம் (SCP) மற்றும் னுபைவையட Digital Crimes Community Portal உடன் முதலாவது கைச்சாத்திட்ட நிறுவனமாக Sri lanka CERT நிறுவனம் அமைகின்றது. நாட்டின் தகவல் உட்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் மற்றும் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சங்கம் கடந்த 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் Mircrosoft Sri lanka வுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகின்றது. மைக்ரோசொவ்ட் பாதுகாப்பு எதிர்வுகூறல் மையம் அமைத்தல் (Microsoft Security Response Center) தீங்கிழைக்கும் URL இன் தினசரி செயற்பாட்டு நெரிசலை உருவாக்குதல்  போன்றவற்றால் இலங்கையிலுள்ள தனியார் மட்டுமன்றி அரச துறைகளுக்கும் அறிமுகப்படுத்த முடியும். தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கிரைம் யுனிட்டால் மேலும் இந்த உறவை வலுப்படுத்த எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் தீங்கிழைக்கும் தளங்களை அடையாளம் காண்பதற்கு சட்ட அமுலாக்க முகவர் ஊடாக நிபுணத்துவ சேவையை வழங்குவதில் மைக்ரோசொவ்ட் நிறுவனம் உலகத்தடம் பதித்துள்ளது என்றார். 
 
Cybercrime இனால் பலதரப்பட்டோர் அங்கீகரிக்கப்படாத பாவனையை மேற்கொண்டு வருகின்றனர். அவையாவன வங்கிக் கணக்குகளை கையாடல், தேசிய அடையாள அட்டை திருட்டு, இரகசிய ஆவணத்திருட்டு மற்றும் மாற்றம் செய்தல், பதிவேற்றுதல், SPAM, அறிவுசார் சொத்துத் திருட்டு உள்ளிட்ட பல விடயங்கள் அடங்கும். இந்த Cybercrime  ஆனது  காவல் துறைக்கும் சட்டத்துறைக்கும் பாரிய சவாலாக அமையும் என தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
அண்மையில் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தினால் ஸ்தாபிக்கப்பட்டCybercrime மத்திய நிலையத்தில் சர்வதேச சட்ட நிபுணர்கள் விசாரணைக்குழுக்கள் மற்றும் பகுப்பாய்வாளர்கள் உள்ளிட்டோர் உள்ளடங்குகின்றனர். 
 
நோர்ட்டன்Cybercrime இன் 2013ஆம் ஆண்டின் அறிக்கையின்படி ஒவ்வொரு செக்கனுக்கும் 12 பேர் வீதம் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் இதன்படி நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது. 
 
Cybercrime க்கு சுமார் 60 சதவீதமான சிறிய அளவிலான வர்த்தக நிலையங்கள் இலக்காகின்றன. இதனால் புதிதாக ஆரம்பிக்கப்படும்  வியாபார ஸ்தாபனங்கள் ஆறு மாதத்திலேயே நட்டமடைந்து மூடப்பட்டுள்ளன என்பதும் அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
Top