GuidePedia

0
அலுவலக புகையிரத சேவைகள் இன்று திங்கட்கிழமை வழமை போல் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.
 
வேலை நிறுத்தம் என்ற “ஆட்டத்தை” தொடர்ந்து ஆடுவதற்கு இடமளிக்க முடியாது. இதற்கு இரண்டொரு தினங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அமைச்சர் குமார வெல்கம மேலும் தெரிவிக்கையில்,
 
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகள் ஒருவரொருவராக மீண்டும் வேலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். தற்போது 70 பேர் வேலை செய்கின்றனர். அத்தோடு ஓய்வு பெற்ற சாரதிகளுக்கும் சேவையில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
 
இன்றைய தினம் அலுவலக புகையிரத சேவைகளை தடையின்றி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய  சேவைகளை இரண்டொரு தினங்களில் வழமைக்கு கொண்டு வருவோம்.
 
வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளனர். தொழிலுக்கு வர முடியாமல் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர்.
 
எனவே வேலை நிறுத்தம் என்ற ஆட்டத்தை தொடர்ந்தும் ஆடுவதற்கு இடமளிக்க முடியாது.
 
இரண்டொரு தினங்களில் இதற்கான தீர்வைக் காண்போம். தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாரதிகள் ஒருவரொருவராக மீள வந்து சேருகின்றனர். 
 
அமைச்சருக்கு புகையிரத சேவைகளை கண்காணிப்பதற்கு எவரையும் நியமிக்கும் அதிகாரம் உண்டு. அதற்கமைய ஒருவரை நியமித்தேன்.
ஆனால் அவர் தனது பதவியை பிழையாக பாவித்ததால் வெளியேற்றினேன். இது நியாயமானது.
 
2000 பேர் போக்குவரத்து அமைச்சுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அமைச்சர் வெல்கம தெரிவித்தார்.
 
இதேவேளை ஒரு நாளைக்கு சராசரி 330 ரயில் சேவைகள்  இடம்பெற வேண்டும். ஆனால் தினமும் 280 சேவைகள் நடைபெறும்.
 
ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக இச்சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.  

Post a Comment

 
Top