நீர்கொழும்பு பிரதேசத்தில் சந்தன மரங்களை வெட்டிய இருவரை நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
திம்பிரிகஸ்கட்டுவ , ஹரிச்சந்திரபுர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தன மரங்கள் வெட்டப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment