GuidePedia

0
13 வயது பாடசாலை சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்ட மூன்று இளைஞர்களை மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மாத்தளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மூவரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 
 
மாத்தளை ஹிக்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களையே நீதிவான் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 
 
கஞ்சா வியாபாரம் செய்வது தொடர்பாக மாத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியினை சோதனையிடும் போது பாழடைந்த இடம் ஒன்றில் பாடசாலை சிறுமி ஒருவருடன் மூன்று இளைஞர்கள் இருப்பதைக்கண்டு விசாரணை செய்தபோது அச்சிறுமி 13 வயதுடைய பாடசாலை மாணவி என்றும் இவ்விளைஞர்கள் சிறுமியை கடத்தி வந்து பாலியல் குற்றம் புரிய முயற்சித்ததாகவும் தெரிய வந்துள்ளது. 
 
இதனையடுத்து பொலிஸார் குறித்த இளைஞர்களையும் சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போதே நீதிவான் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

Post a Comment

 
Top