GuidePedia

0
மந்திகையில் உள்ள பருத்தித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை முன்பாக உள்ள வீதியில் பாரவூர்திகள் பயணிக்க பருத்தித்துறை பிரதேச சபை தடை விதித்துள்ளது. 
 
இத்தடையை வெளிப்படுத்தும் படத்துடன் கூடிய விளம்பரப்பலகைகள் மந்திகை யாழ்ப்பாண வீதிச் சந்தியிலும் மந்திகை சாவகச்சேரி வீதிச்சந்தியிலும் நிறுவப்பட்டுள்ளன. 
 
வைத்தியசாலை வீதி ஊடாக பாரவூர்திகள் கனரக வாகனங்கள் பயணிப்பதால் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் நோயாளர்கள் பார்வையாளர்கள் பெரும் சிரமங்களையும் இடர்களையும் எதிர்நோக்குவதுடன் நோயாளர்களின் வாகனங்கள் அம்புலன்ஸ் வண்டி பயணிப்பதிலும் சிரமங்கள் இருந்து வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் சில வருடங்களுக்கு முன்னர் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தது. 
 
அக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் குறித்த தடையை உரிய முறையில் ஏற்படுத்தவில்லை. தற்போதுதான் பிரதேச சபை உரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

Post a Comment

 
Top