ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார்.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகததின் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
நாளை மறுதினம் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் ஹோலியங் சூ அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இலங்கை வந்தடைந்ததன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள உதவி செயலாளர் நாயகம் ஹோலியங் சூ,
2013 தொடக்கம் 2017 வரையான ஐ.நா. அபிவிருத்தி உதவி கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் முதல் வருடத்தில் அடையப்பெற்றுள்ள முன்னேற்றம் தொடர்பாக பார்வையிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது இலங்கை விஜயமானது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவே அமைந்துள்ளது எனவும் குறிப்பாக நீதிநியாயம் பால்நிலை சமத்துவம் சமூக பொருளாதார அபிவிருத்தி வலுவூட்டல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் ஆகிய துறைகள் குறித்து ஆராய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் இலங்கை விஜயத்தின்போது வடமாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளவுதுடன் வடக்கில் அரசாங்க அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஹோலியங் சூ, ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.

Post a Comment