GuidePedia

0


திருமண யோசனையை நிராகரித்ததன் பின்னர் பயாகல பிரதேச செயலாளர் காரியாலயத்தில் அனர்த்த நிராவாரண சேவையாளராக பணியாற்றுகின்ற யுவதிக்கு குறுந்தகவல்களை அனுப்பிய பயாகலையைச்சேர்ந்த அபிவிருத்தி அதிகாரியொருவரை அநுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் 2013 ஆம் ஆண்டுமுதல் குறுந்தகவலை (எஸ்.எம்.எஸ்) தூசனத்தில் அனுப்பியுள்ளார். இதனையடுத்தே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ வீரரொருவர் மற்றும் பரஸ்சன்கஸ்வௌ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்களின் பெயர்களில் பெற்றுக்கொண்ட சிம் காட்களின் ஊடாகவே அவர் இவ்வாறான குறுந்தகவல்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

 
Top