GuidePedia

0
13ம் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ், தேசிய வானூர்தி சேவை குறித்த அதிகாரங்கள் எவையும் வடக்கு மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை என்று, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடமாகாணசபையின் அமர்வின் போது, யாழ்ப்பாணம் - பலாலி மற்றும் திருகோணமலை ஆகிய வானூர்தி நிலையங்களில் இருந்து இந்தியாவுக்கு நேரடி வானூர்தி சேவைகள் நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த பிரேரணையை முன்வைத்திருந்தார். 

எனினும் தேசிய வானூர்தி சேவைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு உரித்துடைது இல்லை என்று இலங்கையின் சிவில் வானூர்தி சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கட்டுநாயக்க மற்றும் மாத்தலை வானூர்தி சேவைகள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட்ட வானூர்தி நிலையங்களாக உள்ளன. அதற்கு மேலதிகமாக வானூர்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்கும்.

வடமாகாண சபையால் அது குறித்து எந்த தீர்மானத்தை மேற்கொள்ள முடியாது. ஆனால் இனி தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பிரேரணை தொடர்பில் ஜெனீவாவில் சென்று முறையிட்டாலும், அது நகைப்புக்குரிய ஒரு விடயம் என்றும் குறித்த அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளாராம்.

Post a Comment

 
Top