கையடக்கத் தொலைபேசிகளை விரித்து டப்லட் கணினிகளாக மாற்றவும், பாரிய தொலைக்காட்சி திரைகளை மடித்து எடுத்துச் செல்லவும் உதவுக் கூடிய கோல்டன் மெஷ் என்ற புதிய மூலப்பொருளை அமெரிக்க ஆய்வாளர்கள் விருத்தி செய்துள்ளனர்.
இலத்திரனியல் திரைகளை மடிக்க உதவும் முதலாவது தொழில்நுட்பமாக இது விளங்குகிறது.
தம்மால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூலப்பொருள் உடலினுள் பொருத்தப்படும் மருத்துவ ரீதியான செயற்கை உறுப்புக்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளதாக அமெரிக்கா {ஹஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நெகிழ்ச்சித்தன்மையுடைய திரைகளை விருத்தி செய்துள்ள போதிலும் புதிய தொழில் நுட்பமானது கணினி மற்றும் தொலைக்காட்சி திரைகளை முழுமையாக மடிக்கவும் சுற்றவும் வழிவகை செய்கிறது.



Post a Comment