வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் குளத்துமடு கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கிரான் வாகனேரி கிராம சேவகர் பிரிவில் குளத்துமடு கிராமத்தில் குமாரியன் ரட்ணசிங்கம் வயது 42 என்பவரே அவரது இரண்டாவது மனைவியின் சகோதரினால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவருக்கு முதல் மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இரண்டாவது மனைவிக்கு ஒரு பிள்ளையும் உள்ளது.
மரணமைடைந்தவரும் அவரது இரண்டாவது மனைவியும் சவூதி அரேபியா நாட்டுக்கு தொழில் நிமிர்த்தம் சென்று கணவர் மூன்று மாதத்திற்கு முதல் நாடு திரும்பியதாகவும் அவரது இரண்டாவது மனைவி இரண்டு வாரத்திற்கு முதல் நாடு திரும்பிய நிலையில் தனது தாயின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் நேற்று முன்தினம் மாலை ரட்ணசிங்கம் மனைவியின் தாயின் வீட்டிற்கு வந்த சமயம் ஏற்பட்ட வாய்த்தக்கத்தின் காரணமாக ஏற்பட்ட கைலப்பில் அவரது மைத்துரனால் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேயே உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் சத்தம் கேட்டு வந்த மரணமடைந்தவரின் சகோதரி நிர்மலா காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய தடியுடன் சந்தேகநபரான அப்புகாமி சுதாகரன் (வயது 20) வாழைச்சேனை பொலிஸில் சரணடைந்துள்ளார்

Post a Comment