படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கண்ணீர் புகைப்பிரயோகம் செய்வதே வழமை. ஆனால் படையினர் நால்வரை ஏற்றிச் சென்ற வாகனமொன்றின் பின் பகுதியிலிருந்த கண்ணீர்ப்புகை கொள்கலமொன்று திடீரென வெடித்து புகையை வெளிப்படுத்தியதால் படையினர் அலறியடித்துக்கொண்டு வாகனத்தை விட்டு வெளியேறிய சம்பவம் இஸ்ரேலில் இடம்பெற்றுள்ளது.
ஜோர்தான் ஆற்றுக்கு அண்மையில் மேற்கு கரைபிரதேசத்திலுள்ள பிலின் கிராமத்துக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலிய படையினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலொன்றையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை படையினர் துரத்திச் சென்றபோதே படையினர் அசடு வழியும் படியான மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்ணீர்ப்புகையிலிருந்து தப்புவதற்கு வாகனத்திலிருந்து மேற்படி 4 படைவீரர்களும் குதித்த போது அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் வீதியெங்கும் சிதறியுள்ளன.
அளவுக்கதிகமான செறிவுடைய கண்ணீர்ப்புகையானது கண்களை நிரந்தரமாக குருடாக்கவும் சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளாகவும் நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment