ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கும் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன் வைக்கப் படவுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கூறி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் 2 தடவை கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் ஜெனீவாவில் ஐ.நா. சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.
அதில் இலங்கை மீது அமெரிக்கா 3அவது தடவையாக கண்டன தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. தற்போது அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து இத்தீர்மானத்தை கொண்டு வருகிறது.
இந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் இலங்கை முனைப்புடன் உள்ளது. கடந்த 2 முறையும் கொண்டுவரப்பட்ட கண்டன தீர்மானங்களை இந்தியா ஆதரித்தது. இந்த நிலையில் தற்போதும் அமெரிக்கா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீர்மானத்தின் மீது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நடைபெறும் வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்த தகவலை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment