ஆசனவாயிலில் தங்கத்தை மறைத்து கொண்டுச் செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணிளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவரிடமிருந்து 14 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment