GuidePedia

0
கனடாவில் ஒண்டோரியோ பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்த ஒரு விபத்து காரணமாக அந்த கட்டிடத்தை வடிவமைத்த பொறியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒண்டோரியோ மாகாணத்தின் Elliot Lake என்ற பகுதியில் Algo Centre Mall என்ற ஷாப்பிங் மால், கடந்த 2012ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கூரை விழுந்ததால் ஏற்பட்ட விபத்து ஒன்றில் இரண்டு பெண்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து விசாரணை செய்து வந்த போலீஸார், விபத்துக்கு காரணம் கட்டிடத்தின் உறுதியற்ற தன்மையே என குற்றம் சாட்டி, அந்த கட்டிடத்தை வடிவமைத்த பொறியாளர் Robert Wood அவர்களை கைது செய்தனர்.
64 வயதான Robert Wood, ஒண்டோரியோவில் பல கட்டிடங்களை கட்டியவர். இவர் மீது இரண்டு கிரிமினல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது கைது குறித்து இவருடைய குடும்பத்தினர் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கில் இதுவரை 125 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. 117 நாட்கள் விசாரணை நடந்துள்ள இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

Post a Comment

 
Top