GuidePedia


ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஜக்கிய நாடுகின் மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இலங்கைக்கு சார்பான குழுவில் தற்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இணைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தகவலை இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி செயலக பேச்சாளர் மொஹான் சமரநாயக்க.ஜக்கிய நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கை சார்பாக இடம்பெற்றுள்ள குழுவிற்கு தலமை வகிக்கும் பொறுப்பு வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினரே உரிய மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.இதனாலேயே தற்போது இவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரியவருகின்றது.

ஜக்கிய நாடுகளின் மனிதவுரிமை பேரவை தொடர்பான அமர்வுகள் வருகின்ற 3ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.இதனிடையே இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மனிதவுரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை தமது அறிக்கையை மார்ச் 26 ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.அத்துடன் அமெரிக்காவும் தமது பிரேரணையை பேரவை அமர்வுகளின் போது தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதனிடையே அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தமுறை மனிதவுரிமைகள் மாநாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி உரையாற்றுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
 
Top