GuidePedia

0
காணாமற்போனவர்களின் உறவினர்கள் இருவர்நேற்று சாவகச்சேரியில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் விசாரணையின் போது இரகசிய சாட்சியமளித்திருந்தனர்.
 
காணாமற்போன தமது உறவினர்களை மீட்க ஆட்கொணர்வு மனுவினை நீதிமன்றில் தாங்கள் தாக்கல் செய்யவுள்ளதால்  தமது சாட்சியங்களை பகிரங்கப்படுத்த விரும்பவில்லையென தெரிவித்த இரண்டு குடும்ப பெண்கள், ஆணைக்குழுவின் முன் இரகசிய சாட்சியமளித்தனர்.
 
சாவகச்சேரியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் ஆணைக்குழு விசாரணைக்கு வருகைதந்த இவர்கள் இந்த ஆணைக்குழுவின் விசாரணைக்கு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் சமுகமளித்திருப்பதனால் நீதிமன்றத்தில் தங்களினால் தாக்கல் செய்யப்படவுள்ள ஆட்கொணர்வு மனுவிற்கு பாதிப்பு ஏற்படவாய்ப்புள்ளதாக ஆணைக்குழுவினரிடம் எடுத்துக்கூறி இரகசிய சாட்சியமளித்தனர்.
 
இதேவேளை மேற்படி குடும்பப் பெண்களின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழுவினர் இரகசிய சாட்சியமளிக்க உடன்பட்டனர்.
 
இதனையடுத்து ஒலி பெருக்கிகளுக்கான இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதோடு அவர்களின் சாட்சியம் யாருக்கெதிராக முன்வைக்கபட்டது போன்ற தகவல்களும் ஆணைக்குழுவினரால் இரகசியம் பேணப்பட்டது.

Post a Comment

 
Top