மட்டக்களப்பு வாகரை கிருமிச்சை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் நால்வரை வாகரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சேருவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் கூரிய ஆயுதங்கள் மற்றும் கல் உடைக்கும் அலவாங்கு போன்றவைகளை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபர்களை திங்கட்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாகரை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment