பஸ்ரா லைட் மசகு எண்ணெய் வகையை ஈராக்கிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பில் ஈராக் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நேற்றைய தினம் இலங்கையின் வர்த்தக மற்றும் வணிக செயற்பாடுகளுக்கான அமைச்சர் றிசார்ட் பதியுதீன் மற்றும் ஈராக்கின் இலங்கைக்கான தூதுவர் காஹாட்டான் டாஹா காலீஃவ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்றிருந்தன.
இது தொடர்பிலான மேலதிக பேச்சுவார்த்தைகள் பெப்ரவரி 24ஆம் திகதி பாக்தாத் நகரில் இடம்பெறவுள்ள இணைந்த பொருளாதார கமிஷன் செயலமர்வின் போது இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
