GuidePedia

0


தென் அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஸ்கோபிய வகையைச்சேர்ந்த ஜீப் வண்டி தீப்பற்றி எரிந்துவிட்டதாகவும் அதில் பயணித்த இரண்டு குழந்தைகள் உட்பட எண்மருக்கு எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை 1.50 மணியளவில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 689 எல் கிலோமீற்றர் மைல்கல்லிற்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளது.

கொட்டாவை பகுதியிலிருந்து பின்னதுவ பக்கமாக பயணித்த ஜீப் வண்டியே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துவிட்டதாகவும் அதில் பயணம் செய்தவர்கள் பண்டாரகமை பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

 
Top