GuidePedia

0

பாகிஸ்தானிலிருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத் தி வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கராச்சி நகரிலிருந்து இலங்கைக்கு வந்த யுஎல்184 இலக்கமுடைய விமானத்தில் தோடம்பழங்களுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளை கொண்டு வர முற்பட்ட போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 64 வயதுடைய பாகிஸ்தான் பிரஜை என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கொண்டு வந்த பைக்குள் 40 தோடம்பழங்கள் இருந்துள்ளன. அவற்றை முழுமையாக சோதனையிட்ட போது 12 தோடம்பழங்களுக்குள் ஹெரோயின் போதைப்பொருள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அவை சுமார் 1 கிலோகிராம் எடையுடையவை எனத் தெரிவித்த சுங்க அதிகாரிகள் சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Post a Comment

 
Top