12,600 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்ட ஆண் குழந்தையொன்றின் எச்சங்களிலிருந்து பெறப்பட்ட மரபணுவானது நவீன அமெரிக்கர்களினது பூர்வீகக் குடியினர் ஆசியாவிலிருந்து நீண்ட காலத்திற்கு முன் மறைந்த நிலப்பாலமொன்றினூடாக
அமெரிக்காவை வந்தடைந்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக சர்வதேச நிபுணர் குழுவொன்றின் ஆய்வொன்று கூறுகின்றது.
12600 ஆண்டுகளுக்கு முன்னர் மொன்டானாவில் புதைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையினது எச்சங்கள் கொல்விஸ் கலாசாரத்தை சேர்ந்த அங்கத்தவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் அமெரிக்காவில் முதன்முதலாக குடியேறிய பூர்வீக குடிகள் சுமார் 15000 வருடங்களுக்கு முன் ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என நிரூபணமாகியுள்ளதாக மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய டொன்மார்க்கின் கொப்பெனேகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இஸா வில்லர்ஸ்லெவ் தெரிவித்தார்.
இதுவரை காலமும் அமெரிக்க பூர்வீக குடிகள் அமெரிக்காவிலிருந்து வந்ததாக நம்பப்படுகின்றது.
மேற்படி கொல்விஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த பாலகனின் குடும்பத்தினர் தற்போது நவீன அமெரிக்கா பூர்வீக குடிகள் 80 சதவீதத்தினரது நேரடி மூதாதைகளாவர்.
இந்த பாலகனது மரபணுக்களானது கனடாவிலுள்ள பூர்வீகக் குடிகளை விட மத்திய மற்றும் தென் அமெரிக்க பூர்வீக குடிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டதாக உள்ளது.

Post a Comment