உலகில் ஒவ்வொரு வருடமும் ஒரு மில்லியன்
குழந்தைகள் பிறந்து 24 மணி நேரத்துக்குள் இறப்பதாக சேவ் த சில்ட்ரன்
அமைப்பு செவ்வாய்க்கிழமை அறிக்கையிட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் சுமார் 6.6 மில்லியன் சிறுவர்கள்
உயிரிழந்துள்ளதாக பிரித்தானியாவை அடிப்படையாகக் கொண்டு
செயற்படும் மேற்படி அமைப்பு அறிக்கையிட்டுள்ளது.
அவற்றில் பல மரணங்கள் தவிர்க்கக் கூடிய காரணங்களால் இடம்பெற்றுள்ளதாக அந்த அமைப்பு கூறுகின்றது.
அத்துடன் தினசரி 5 வயதுக்கு கீழ்ப்பட்ட 18,000 சிறுவர்கள்
மரணமடைந்து வருவதாகவும் அவற்றில் பல தடுத்திருக்கக்கூடியவை
எனவும் சேவ் த சில்ட்ரன் குறிப்பிட்டுள்ளது.
பிறந்து ஒரு நாளுக்குள் மரணத்தைத் தழுவும் குழந்தைகள் தொடர்பில் அதிகூடிய விகிதாசாரத்தைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.
அங்கு ஒவ்வொரு 1000 பிறப்புகளுக்கு 40.7 என்ற வகையில் புதிதாக பிறந்த
குழந்தைகள் 24 மணி நேரத்துக்குள் மரணமடைந்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு அடுத்த நிலையில் நைஜீரியா, சியரோ லியோன், சோமாலியா, கினியா பிஸாயு, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன.

Post a Comment