GuidePedia

0
அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆட்டோவுடன் மோதுண்டு பின்னர் வீதியோரமாகயிருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
யாழ்.ஆனைனப்பந்திப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மேற்படி விபத்தில் கோப்பாயைச் சேர்ந்த வி.சுதாகரன் (வயது-32)என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.
 
ஒலியெழுப்பிக்கொண்டு வாகனத்தில் துரத்திக்கொண்டு வந்த  பொலிஸாருக்கு பயந்து மோட்டார் சைக்கிளை குறித்த நபர் வேகமாக செலுத்தி வந்ததாகவும் விபத்தை நேரில்கண்ட அப்பகுதி  மக்கள் தெரிவித்தனர்.
 
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். அதேவேளை உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டள்ளது.

Post a Comment

 
Top