GuidePedia

0
தமிழர்களுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை அவுஸ்ரேலியாவுக்கு அகதி அந்தஸ்துக்கோரி மற்றும் அடைக்கலம் கோரி படகுமூலம் சென்றவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அவுஸ்ரேலியா அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு மாகாண சபையின் ஆறாவது அமர்வு நேற்று கைதடியிலுள்ள மாகாணசபைக் கட்டடத்தில் இடம்பெற்றது இதனையடுத்து ஊடகவியலாளர்கள் சந்திப்பினை நடத்திய பிரதி அவைத்தலைவர் மேலும் தெரிவிக்கையில்,
 
யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களாகியும் இன்னும் தமிழ் மக்களிற்கான நிரந்தரத்தீர்வு வழங்கப்படவில்லை இன்றும் இங்கு மக்கள் தங்கள் வாழ்வை அச்சத்திலேயே கழிக்கவேண்டிய நிலைகாணப்படுகின்றது.
இதனால் இங்குவாழும் இளைஞர், யுவதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவிற்கு செல்கின்றார்கள். இவ்வாறானவர்களை திருப்பி அனுப்ப அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை திருப்பி அனுப்புவதை சர்வதேச நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் அவ்வாறு அனுப்பப்படும் இளைஞர் யுவதிக்கு ஆபத்துக்கள் உள்ளன என்பதை நான் அவுஸ்ரேலிய தூதரகம் ஊடாக அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு  கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளேன்.
இதேவேளை ஏற்கனவே இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் வேறு நாடுகளிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு தஞ்சம் கோரி செல்கின்றனர். அத்தகையவர்களையும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை அந்நாடு தவர்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

 
Top