GuidePedia

0
'பேஸ்புக்" சர்ச்சையால் உயிரிழந்த மாணவி தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபராக கருதப்பட்ட குறித்த மாணவி கல்விபயின்ற குருநாகலை ஸ்ரீ ஜோன் கொத்தலாவல கல்லூரி அதிபர் சமன் இந்திரரத்ன பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
 
வெனுஷா இந்திம பண்டார என்ற 16 வயது  மாணவி கடந்த வாரம் பேஸ்புக் விவகாரத்தால் தற்கொலை செய்யும் முன்னர் தன் கையால் எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த கல்லூரி அதிபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top