GuidePedia

0
அமெரிக்காவில் உள்ள ஒரு பெண் ஒருவர் தூரிகை மற்றும் எவ்வித உபகரணங்களின் உதவியும் இன்றி வெறும் விரல்களினால் மிக அற்புதமாக ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.
 
அமெரிக்கா, நியூயோர்க் நகரின் புருக்ளீன் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய சாரியா போர்மன் என்ற பெண்ணே இவ்வாறு ஓவியங்களை வரைந்து சாதனைப் படைத்துள்ளார்.
இவருடைய ஓவியங்கள் அனைத்தும் இயற்கையில் உள்ளவற்றை கெமரா மூலம் படம் பிடித்தது போன்று மிகவும் அற்புதமாக காணப்படுகின்றன.
 
கடல், பனிமலைகள் முதலியவற்றை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் வரையும் எந்த ஓவியத்துக்கும் தூரிகைகள் பயன்படுத்துவதில்லை. தன்னுடைய விரல்களில்தான் அனைத்து ஓவியங்களையும் வரைவார்.
இம்மாதிரியான ஓவியத்தை வரைவதற்கு இவருடைய தாயார் ரினா பாஸ் போர்மன் ஆலோசனையும் பயிற்சியும் வழங்கியதாகவும் தன்னுடைய ஓவியங்களை பார்ப்பதற்கு தற்போது அவர் உயிரோடு இல்லை எனவும் சாரியா போர்மன் தெரிவித்துள்ளார்.
 
இவருடைய ஓவியங்களை இயக்குனர்களான டேவிட் பின்சர் மற்றும் கெவின் ஸ்பேசி ஆகியோர் தாம்  இயக்கிக்கொண்டிருக்கும் தொலைகாட்சி தொடர்களுக்கு பின்னணியாக வைப்பதற்காக பெரும் விலை கொடுத்து இவரிடம் இருந்து வாங்கி சென்றதாகவும் தெரிவித்தார். இவருடைய ஓவியங்கள் சுமார் 6 ஆயிரம் டொலர் முதல் 9 ஆயிரம் டொலர் வரை விலைபோவதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

 
Top