GuidePedia

0
பலவந்தமாக கடத்தி காணாமற்போகச் செய்தலை ஒரு தண்டனைக்குரிய குற்றமாக நடைமுறைப்படுத்துதல் என்ற விடயத்தை தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளடக்குமாறு வலியுறுத்துவதாக இந்தப் பிரேரணை அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றினை வலியுறுத்துவதாக இந்தப் பிரேரணை அமைவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. உள்நாட்டில் விசாரணைப் பொறிமுறை ஒன்றினை அமைத்து உண்மைகள் கண்டறியப்படவேண்டும் என்று கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், நம்பகத்தன்மை வாய்ந்ததாக இந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை அமையவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன. எனவே சர்வதேசப் பொறிமுறை ஒன்று அவசியம் என்று வலியுறுத்துப்படலாம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வீரகேசரிக்கு தெரிவித்தார்.
 
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
 
யுத்தப் பாதிப்புக்கள் தொடர்பாகவும், காணாமற் போனோர் தொடர்பாகவும் அரசாங்கம் கருத்துக் கணிப்புக்களை மேற்கொண்ட வருகின்றது. ஆனால் சர்வதேசம் திருப்தியடையும் வகையில் அந்த விசாரணைகள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நிலவுகின்றன. இந்தக் கருத்துக் கணிப்புக்களில் குறைபாடுகள் இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒருபோதும் கூறவில்லை. ஆனால், யுத்தத்தினால் முழுக் குடும்பமும் உயிரிழந்திருந்தால் அந்த விபரம் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 
 
அதேபோல், வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பங்களில் உயிரிழந்தவர்களின் விபரங்களை உள்ளடக்குவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்களைச் சுட்டிக்காட்டி, இந்த கருத்துக் கணிப்பு போதிய விபரங்களை உள்ளடக்கியதாக அமையாது என்ற ஒரு சந்தேகமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் எழுப்பப்படலாம். இவ்வாறான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினாலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரை இந்த விடயங்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டவதற்கான ஓர் பொறிமுறையினை உருவாக்கியுள்ளார்கள் என்பது ஓரளவுக்காவது இந்த விடயத்தில் முன்னேற்றம் காட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது என்றார்.

Post a Comment

 
Top