GuidePedia

0

சர்ச்சைக்குரிய கனேடிய பாடகர் ஜஸ்டின் பைபரின் இரகசிய காதலி எனக் கூறப்பட்ட யுவதியொருவர் தான் ஜஸ்டின் பைபரை காதலிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

19 வயதான பாடகர் ஜஸ்டின் பைபரும் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகியும் நடனக்கலைஞருமான கெத்தரின் கஸ்டாவும்  (17) காதலிப்பதாகவும் சில தினங்களுக்குமுன் தகவல்கள் வெளியாகியிருந்தன.  நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமான இவ்விருவரும் பின்னர் நெருங்கிப் பழகியதாகவும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்தும் இவர்கள் பேசிக்கொண்டதாகவும் கூறப்பட்டது. 

 

 

ஆனால். இத்தகவல்களை கெத்தரின் கஸ்டான மறுத்துள்ளார். ஐஸ்டின் பைபரின் பெருக்கு அருகில் எனது பெயரை இணைப்பது ஒரு கௌரமாகும். ஆனால் அத்தகவல்கள் பொய்யானவை என கெத்தரின் கூறியுள்ளார். 

 

அமெரிக்காவின் பிரபல பாடகி செலீனா கோமஸும் ஜஸ்டின் பைபரும் தீவிரமாக காதலித்த நிலையில் ஒரு வருடத்துக்கு முன்னர் பிரிந்தனர்.

 

செலீனாவுடன் மீண்டும் இணைவதற்கு ஜஸ்டின் பைபர் முயற்சித்த போதிலும் அவர் அடிக்கடி சர்ச்கைகளில் சிக்கிக்கொள்வது இருவருக்கும் இடையிலனா விரிசலை அதிகரித்து வருகிறது. அண்மையில் பனாமாவுக்கு ஜஸ்டின் பைபர் சென்றபோது சண்டால் ஜெப்ரி எனும் மொடல் ஒருவர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

 
Top