GuidePedia

0

கொழும்பு, சட்டக்கல்லூரி வளாகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை காலை  சட்டக்கல்வியை பாதுகாக்கும் மாணவர் ஒன்றியம் அமைதியான ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

 

இவ்வருடம் சட்டக்கல்லூரிக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் தொகை குறைக்கப்பட்டமை,  எதிர்வரும் வருடம் முதல் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் வயது குறைக்கப்பட்டமை, நுழைவுப்பரீட்சைக்காண பாடத்திட்டம் மாற்றப்பட்டமை எனபவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாகவே இவ்வார்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சட்டக்கல்லூரியின் பிரதி அதிபர் தெரேச பெரேரா மற்றும் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டீ சில்வா ஆகியோருக்கும் ஜனாதிபதி செயலகத்துக்கும் மகஜர் ஒன்றை இவர்கள் கையளித்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

 

 


Post a Comment

 
Top