இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை பல துண்டுகளாகப் பிரித்துவிடும் நோக்கிலேயே அமெரிக்கா செயற்படுகின் றது. இந்த நாடுகளை பல பிரிவுகளாக பிரித்து
விட்டால் அதுவே அமெரிக்கா அடைகின்ற பாரிய அரசியல் வெற்றியாக
கருதப்படுகின்றது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க
தெரிவித்தார்.
தெற்காசியாவை மேற்கு நாடுகளின் சூறையாடும் பிராந்தியமாக
உருவாக்குவதற்கு சில சதி முய்சிகள் இடம்பெறுகின்றன. இதனை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தடுக்கின்றமையின் காரணமாகவே இலங்கை மீது
பாரிய அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர்
குறிப்பிட்டார்.
யுத்தத்தின் பின்னர் இலங்கையுடன் இந்தியா சிறியளவிலான கோபத்துடன்
இருக்கின்றமை தெரிகின்றது. ஆனால் இது தற்காலிகமானது. விரைவில்
இந்த கோபத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்றும் அமைச்சர் எஸ்.பி.
திசாநாயக்க குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்
நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது,
யுத்தம் முடிந்த பின்னர் இலங்கை விடயத்தில் இந்தியா சற்று கோபத்துடன்
இருப்பதாகவே நாங்கள் உணர்கின்றோம். தமிழ்நாட்டின் அழுத்தங்கள்
மற்றும் இந்திய தேர்தல்களே இதற்கு மிகப் பிரதான காரணம் என்று
அறிகின்றோம். ஆனால் இந்தியாவின் இந்த கோபமான நிலைமை
தற்காலிகமானதாகும். தற்போதும் இலங்கையும் இந்தியாவும் சிறந்த
நட்பு நாடுகள் என்பதுடன் நெருக்கமாக செயற்பட்டுவருகின்றன. எனவே
விரைவில் இந்த கோப நிலைமை மாறிவிடும் என்று நம்புகின்றோம்.
இதேவேளை ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா ஏன் இலங்கைக்கு
எதிரான பிரேரணையை கொண்டுவருகின்றது என்று நாம் பார்க்கவேண்டும்.
அதாவது இலங்கையில் புலிகள் அமை ப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ
தலைமையிலான அரசாங்கம் தோற்கடி த்தது. இது அமெரிக்காவுக்கு
பிடிக்கவி ல்லை.
அந்தவகையில் இலங்கை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளை துண்டு
துண்டுகளாக பிரித்துவிடுவதே அமெரிக்காவின் அரசியல்
நோக்கமாகவுள்ளது. இந்த நாடுகளை அவ்வாறு துண்டுகளாக
பிரித்துவிட்டால் அது அமெரிக்கா அடைகின்ற பாரிய அரசியல் வெற்றியாக
கருதப்படுகின்றது.
இதேவேளை அரசாங்கத்துக்கு சர்வதேச அரசியலை முகாமைத்துவம் செய்ய
தெரியவில்லை என்றும் அனைத்தையும் குழப்பிக்கொண்டிருப்பதாகவும்
எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதன் காரணமாக பொருளாதார தடை
விதிக்கப்படலாம் என்று கூறுகின்றன. ஆனால் நாட்டில் தேர்தல் ஒன்று
வந்தவுடன் அவ்வாறு ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்று எதிர்க்கட்சிகள்
கூறுகின்றன. ஆனால் உண்மையில் எமக்கு பாரிய சவால் உள்ளது.
30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ
முடித்தார். யுத்தகாலத்தில் பிரபாகரன் செய்த மனித உரிமை மீறல்கள்
குறித்து இன்று எதிர்க்கட்சியோ சரத் பொன்சேகாவோ கூறுவதில்லை.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற விடயங்கள் குறித்து
பேசிக்கொண்டிருக்கின்றனர். ஜெனிவாவில் எமக்கு எதிராக
பிரேரணையையும் கொண்டுவர முயற்சிக்கின்றனர். அதற்கு உள்நாட்டில்
சில சக்திகள் ஒத்துழைப்பும் வழங்குகின்றன.
ஆனால் எமது அமைச்சர்கள் உலக நாடுகளுக்கு சென்று எமது பக்க நியாயத்தை
எடுத்துரைத்துவருகின்றனர். இந்த யுத்தத்தை முடித்ததை அமெரிக்கா
விரும்பவில்லை. எனவே தான் இவ்வாறான அழுத்தங்களை
பிரயோகித்துவருகின்றனர்.
அந்தவகையில் தெற்காசியாவை மேற்கு நாடுகளின் சூறையாடும்
பிராந்தியமாக உருவாக்குவதற்கு சில சதி முயற்சிகள்
இடம்பெறுகின்றன. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தடுக்கின்றமையின்
காரணமாகவே இலங்கை மீது பாரிய அழுத்தங்கள் விடுக்கப்படுகின்றன.
இலங்கையில் சுயாதீன நீதித்துறை இல்லை என்று எவராலும் கூற முடியாது.
நாட்டில் சட்டத்தின் ஆட்சிபடுத்தல் சிறப்பாகவே உள்ளது.
என்றுமில்லாதவாறு இன்று அரசியல்வாதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுவருகின்றன.
மேலும் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமையை வைத்தே சுயாதீன
நீதித்துறை குறித்து கேள்வியெ ழுப்புகின்றனர். ஏற்றுக்கொள் ளப்பட்ட சட்ட
திட்டங்களுக்கு அமைவாகவே முன்னாள் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டார்.
நாட்டில் சுயாதீன நீதித்துறை இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டது என்றார்.

Post a Comment