மகா சிவராத்திரி தினத்தில் வளமானதொரு எதிர்காலத்திற்கான
எதிர்பார்ப்புக்கள் நிறைவேற வாழ்த்துகிறேன் என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிவபெருமானை கௌரவிப்பதற்காக கொண்டாடப்படும் மகா சிவராத்திரி
விழாவை முன்னிட்டு இலங்கை வாழ் இந்துக்களுக்கு இந்த வாழ்த்துச்
செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
இன்றை தினம் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டங்களில் இலங்கை வாழ்
இந்துக்கள் உலகமெங்குமுள்ள இந்துக்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
இவ்விழாவில் சிவபெருமான் பார்வதி அம்மையாரை மணந்த தினத்தையும்
அவரினால் ஆதி நடனக்கலையின் உருவாக்கம் பேணுதல் என்பவை
அறிமுகப்படுத்தப்பட்ட இரவையும் நினைவு கூர
அனுஷ்டிக்கப்படுவதாக நம்பப்படுகின்றது. இப்பண்டிகையுடன்
தொடர்புடைய பல்வேறு கிரிகைகளில் விரதம் அனுஷ்டித்து கோவிலில் இரவில்
விழித்திருத்தல், தானம் வழங்கல், விளக்கேற்றல் சிவபெருமானை புகழ்ந்து
தேவாரம் பாடுதல் போன்றவையும் அடங்குகின்றன.
இப்பண்டிகையின் முக்கிய அம்சமான விளக்கேற்றல் வைபவம் அறியாமையை
அகற்றி ஞானத்தை தேடும் மானிட சமூகத்தின் உறுதியான முயற்சிகளையும்
தமது வாழ்விலும் சமூகத்திலும் சமாதானத்தையும் ஐக்கியத்தையும்
அடைந்து கொள்வதையும் குறித்து நிற்கிறது.
இலங்கை வாழ் இந்துக்கள் எமது சமூகத்தில் உள்ள ஏனைய சமயங்களை
சேர்ந்தவர்களுடன் பல நூற்றாண்டுகளாக சகோதரத்துவத்துடனும்
ஐக்கியத்துடனும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த முக்கியமான
பண்டிகையை உண்மையான ஐக்கிய உணர்வுடனும் புரிந்துணர்வுடனும்
சுதந்திரமாக கொண்டாடப்படுவதற்கேற்ற சமாதான சூழல் தற்போது
நாடெங்கிலும் காணப்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
மகா சிவராத்திரி தினத்தின் பிரார்த்தனைகள் இந்த எமது தாய்நாட்டில்
உள்ள எல்லா சமூகங்களுக்கு மத்தியிலும் சமாதானம் ஐக்கியத்துக்கான
அவர்களது அர்ப்பணத்தை மேலும் பலப்படுத்துமாக இந்த மகா சிவராத்திரி
தினத்தில் வளமா னதொரு எதிர்காலத்திற்கான அவர்களது எதிர்பார்ப்புக்கள்
நிறைவேற இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Post a Comment