GuidePedia

0
சீனா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என்று சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ சீனா சென்றுள்ள அமைச்சர் ஜீ.எல். பீரிஸிடம் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணை கொண்டுவரப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் சீனா இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
 
மனித உரிமை விவகாரங்களை முன்வைத்து இலங்கையின் உள்விவகாரங்களில் சில நாடுகள் தலையிடுவதை சீனா எதிர்ப்பதாகவும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ குறிப்பிட்டுள்ளார்.
 
சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை நேற்று சந்தித்தபோதே சீன வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
தேசிய சுயாதீனம் இறைமை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகிய வற்றில் இலங்கைக்கு சீனா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையி்ன் விவகாரங்களை இலங்கை மக்களினாலேயே தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பகின்றோம். இது இவ்வாறு இருக்க நேற்று மாலை சீன உதவி பிரதமர் லீ யுவான்சோவையும் அமைச்சர் பீரிஸ் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
 
இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் கட்டியெழுப்புவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதியின் பிரதிநிதியாக சீனா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

Post a Comment

 
Top