GuidePedia

0
புகைத்தல் மற்றும் மது பாவனையற்ற சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் புகைத்தலையும் மது பாவனையையும் கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி விஷேட செயலணி விரைவில் உருவாக்கப்படுமென சுகாதார அமைச்சு குறிப்பிடுகிறது. இதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சர் மைத்திப்பால சிறிசேன மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
புற்று நோய் ஏற்படுவதில் புகைத்தல் மற்றும் மது பாவனை அதிகம் தாக்கம் செலுத்துகிறது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 25 ஆயிரம் புற்று நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். வருடந்தோரும் 15 ஆயிரம் புற்று நோயளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர் அமைச்சு குறிப்பிடுகிறது,
 
அத்துடன், அரசாங்கம் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் புற்று நோய்க்கான சிகிச்சைக்காக 43,806 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது. இந்த வருடமும் 1,500 மில்லியன் ரூபா நிதி புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் சுகாதார அமைச்சு புற்று நோயை ஏற்படுத்தும் புகைத்தல் மற்றும் மது பாவனயைத் தடுக்கும் பணியில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது எனவும் இதனைக் கட்டுப்படுத்த ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் மேலும் அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

Post a Comment

 
Top