GuidePedia

0
உடல் நலக் குறைவு காரணமாக எழுத்தாளர் ஜெயகாந்தன் (80) தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
வயோதிகம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே ஜெயகாந்தனுக்கு உடல் சோர்வு மற்றும் நினைவாற்றல் குறைபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அவரது உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

 
Top