மேல் மற்றும் தென்மாகாணசபை தேர்தல்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால்மூல வாக்காளர் விண்ணப்ப படிவம் வழங்கும் நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையவுள்ளன.
மார்ச் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் மார்ச் 20ஆம் திகதி அவர்களுக்குரிய மாவட்ட செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியும்.
இதேவேளை, தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment