திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய பரிபால சபையினரின் "திருக்கோணேஸ்வரம்" நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரர் இந்துக்கல்லூரி கேட்போர் கூடத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கோணேஸ்வரப் பெருமான் ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்ட நூல் பத்திரகாளியம்மன் ஆலய முன்றலில் பிரதம அதிதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கிருந்து இந்துக்கல்லூரி மண்டபத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

Post a Comment