GuidePedia

நாங்கள் சரி தவறுகளுக்கப்பால் இன்று சிறிய ஒரு அதிகார அலகைப் பெற்றிருக்கின்றோம். இதன் காரணமாகத் தான் இன்று இந்தப் பாடசாலையின் மெய்வல்லுநர் போட்டியின் மத்தியிலே எங்களுடைய வடமாகாண சபைக் கொடியைப் பறக்க விட்டிருக்கின்றோம்.
”நாங்கள் பறக்க விட நினைத்த கொடி வேறு” (பலத்த கரகோசம்).. ஆனாலும் எங்களுக்கு வழங்கப்பட்ட மாகாண அதிகாரம் மூலம் எங்கள் மாகாண சபைக் கொடியை ஏற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்களுக்கு வழங்கப்பட்ட மாகாண அதிகாரத்தைப் பலப்படுத்த வேண்டியவர்களாகவிருக்கிறோம். இதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி அண்மையில் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரை எங்களுடைய சனத்தொகை வளர்ச்சி வீதம் அல்லது அடர்த்தி இன்று கிட்டத்தட்ட 12 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக ஆகியிருக்க வேண்டும்.
ஆனால், தற்போது சுமார் ஐந்தரை இலட்சத்துக்கும் ஆறு இலட்சத்துக்கும் இடைப்பட்ட மக்கள் தான் வாழ்கிறார்கள் எனப் புள்ளி விபரம் கூறுகிறது.
எங்கள் பிரதேசத்தில் சனத்தொகை அடர்த்தி மிகவும் குறைவடைந்து காணப்படும் நிலையில் இது போன்ற கிராமப் புறப் பாடசாலைகளில் மாணவர்களின் பற்றாக்குறை என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
இடப் பெயர்வுக்கு முன்னர் 800 மாணவர்களுடன் இயங்கிய இந்தப் பாடசாலை தற்போது வெறும் 150 மாணவர்களுடன் இயங்கி வருவது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று.
எமது பிரதேசங்களில் சனத்தொகையின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்தது ஏன்? அல்லது வீழ்ச்சி அடையச் செய்யப்படுகிறதா?அல்லது தொடர்ச்சியாக இந்த நிலைமை நீடிக்க வேண்டுமென நிகழ்ச்சி நிரலின் கீழ் இயக்கப்படுகினறோமா? என்ற சந்தேகம் எழுகிறது.
இந்த நிலையில் தற்போது எம்மிடம் இருக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு அடுத்த கட்டம் நோக்கிப் போகிறோம்?என்பது தான் எங்கள் முன்னாலுள்ள மிகப் பெரிய சவால்.
எந்தவொரு காலகட்டத்திலும் சோடை போய் விடாத, எந்தவொரு சக்திகளாலும் எங்கள் மக்களுடைய உணர்ச்சிகளை, செல்வாக்கினைப் பெற்றுக் கொள்ள முடியாதவளவுக்கு அன்று எவ்வாறு கட்டமைப்புக்கள் இருந்தனவோ அவ்வாறே இன்று வரை நீடிப்பது மகிழ்ச்சிக்குரியது.
இந்த நிலைமையைத் தொடர்ச்சியாகத் தக்க வைக்க வேண்டிய வேலைத்திட்டங்களில் ஈடுபட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மிகப் பெரிய கல்விப் பாரம்பரியத்தையும், விளையாட்டுத் துறைச் சாதனைகளையும் கொண்டிருக்கக் கூடிய பூமியாகக் குப்பிளான் மண் காணப்படுகின்றது. பல சிறப்புக்களையுடைய குப்பிளான் மண்ணினுடைய பெருமையைத் தாங்கியிருக்கும் இந்தப் பாடசாலை.. இதனுடைய சிறப்புக்கள்.. இவை பற்றியெல்லாம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கலாபூசணம் சண்முகலிங்கம் ஐயா மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார்.
இதனையிட்டு நான் மிகவும் பெருமைப்பட்டேன். இந்த ஊரைப் பற்றி முன்னரே ஓரளவு விடயங்கள் அறிந்திருந்தாலும் அவருடைய உரைக்குப் பின்னர் இந்தவிடத்தில் அதிதியாகக் கலந்து கொண்டிருப்பதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளரும் பழைய மாணவருமான கலாபூசணம் ஐ.சண்முகலிங்கமும், துறை சார் விருந்தினராக வலிகாமம் ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.நடராஜாவும் மற்றும் ஓய்வு நிலை இந்துக் கலாசார உதவிப் பணிப்பாளர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், சுன்னாகம் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி தசநாயக்கா, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக விருந்தினர்கள் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து மங்கள வாத்திய சகிதமாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை விருந்தினர்கள் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தேசியக் கொடி,வடமாகாண சபைக் கொடி என்பன ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகின.
இம் முறை விளையாட்டுப் போட்டியில் 400 புள்ளிகள் பெற்று சுப்பையா இல்லம் (மஞ்சள் நிறம்) முதலாமிடத்தையும், 368 புள்ளிகள் பெற்று சுந்தரசர்மா இல்லம் (பச்சை நிறம்) இரண்டாமிடத்தையும், 336 புள்ளிகள் பெற்று தம்பிராசா இல்லம் (சிவப்பு நிறம்) மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.
IMG_7718
IMG_7723
IMG_7729
IMG_7730
IMG_7731
IMG_7735
IMG_7741
IMG_7742
IMG_7743
IMG_7745
IMG_7746
IMG_7749
IMG_7762
IMG_7763
IMG_7764
IMG_7779
IMG_7781
IMG_7783
IMG_7785
IMG_7787
IMG_7792
IMG_7796
IMG_7799
IMG_7815
IMG_7820
IMG_7823
IMG_7827
IMG_7829
IMG_7832
IMG_7836

IMG_7837
 
Top